வான்மதியே வான்மதியே பாடல் வரிகள்

Movie Name  Aranmanai Kili
திரைப்பட பெயர் அரண்மனை கிளி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer S. Janaki
Year 1993

பெண் : வான்மதியே வான்மதியே
தூது செல்லு வான்மதியே

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே

பெண் : வைகை வந்து
கை அணைக்க வெள்ளி
அலை மெய் அணைக்க
வாடி நின்ற தென் மதுரை
நான் தானோ

பெண் : தென்றலுக்கு
ஆசை இல்லை தேம்பிடுதே
வாச முல்லை அம்மம்மா
அன்புத் தொல்லை ஏன் தானோ

பெண் : வண்ணப்பூவும்
என்னைக் கண்டு வாய்
இதழை மூடிக் கொண்டு
புன்னகைக்க மாட்டேன்
என்று போராடுது

பெண் : அந்தி மாலை
வரும் நோய் கொண்டு
தன்னந்தனி நான் என்று
பாவை நிதம் வாடும்
விதம் பாராய்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே

பெண் : நெஞ்சுக்குள்ளே
கொட்டி வைத்து நித்தம்
நித்தம் நான் அளக்கும்
என்னுடைய ஆசைகளை
கூறாயோ

பெண் : உன்னைப்போல
நானும் மெல்ல தேய்வதிங்கு
நியாயம் அல்ல வெண்ணிலவே
தூது செல்ல வாராயோ

பெண் : எத்தனையோ
சொல்லி வைத்தேன்
எண்ணங்களை அள்ளி
விட்டேன் இன்னும் அந்த
மன்னன் மனம் மாறாதது
ஏன்

பெண் : உயிர்க் காதல்
துணை வராமல்
கண்ணை இமை
சேராமல் பாவை நித்தம்
வாடும் விதம் பாராய்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Aranmanai Kili, Aranmanai Kili Songs Lyrics, Aranmanai Kili Lyrics, Aranmanai Kili Lyrics in Tamil, Aranmanai Kili Tamil Lyrics, அரண்மனை கிளி, அரண்மனை கிளி பாடல் வரிகள், அரண்மனை கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *