ஏண்டி ராசாத்தி பாடல் வரிகள்

Movie Ispade Rajavum
Idhaya Raniyum
படம் இஸ்பேட் ராஜாவும்
இதய ராணியும்
Music Sam C. S.
Lyrics Sam C. S.
Singers              Sathyaprakash
Year 2019

ஏண்டி ராசாத்தி உன்மேல
ஆசை கொஞ்சி பேச
வாழ்கை பூரா பேச பேச

நீதான் போதுமுன்னு ஓசை ஓசை
இதய ஓசை
காதல் பாஷ பேச
பேச பேச பேச பேச

அடிகடி நானும்
தனிமையில் வந்து சிரிக்கிறேன்
ஒரு நொடி கூட
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்
மணிகணக்குல
உன்ன மட்டும்தானே நினைக்குறேன்
ஏன் என்ன மறுக்குற

காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே
என்னமோ பைத்தியம் ஆகுறேன்

காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
என்னை தேடி நீயும் வா கண்ணே

நான் உன்ன நித்தம்
பாக்கும் போது
நெஞ்சில் ரோசா பூக்குதே
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
ஒன்னுகூடி பேசுதே

யார் நீ என்ன
சுக்கு நூறா ஆக்கி போடுற
ஏதோ சொல்ல
வந்து வந்து தோத்து போகுறேன்


மொத மொத புது வலி தந்து
என்ன உருக்குற
கனவுல வந்து என்ன தூக்கி
நீயும் பறக்குற
நதி நானும் என்ன கடல் போல
நீயும் அழைக்கிற
ஆண் மற்றும் நீ என்னில் கலக்குற

ஹே ஏய்ய்

பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
தீராத மோகம் பிக்கிதே என்ன
உன்னிலே என்னையே தைக்கிறேன்

பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *