தீரா நதி நம் வாழ்வு தானே பாடல் வரிகள்

Movie Nadhi
படம் நதி
Music Dhibu Ninan Thomas
Lyricist Thamarai
Singers         Kapil Kapilan,
Srinisha Jayaseelan
Year 2022
ஆண் : கானல் நீரில் பூத்த முல்லையே
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே
 
ஆண் : ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
 
ஆண் : முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
 
பெண் : ஹா…ஆஅ..
ஹோ அன்றும் இன்றும்
மனமெல்லாம் நீயே
அன்பின் காட்டில் அலைபாயும் தீயே
நீர் தேடும் போது
மழையாய் நீ வந்தாயே
 
ஆண் : நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா
உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா
நீ கேட்கத்தான் நான் பேசினேனா
நீயின்றி நான்தானா
 
பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
 
இருவர் : கானல் நீரில் பூத்த முல்லையே
ஹோ கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
ஹா ..ஆ…வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே
 
பெண் : ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
 
பெண் : முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
ஆண் : சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
 
பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
என் ஸ்வாசம் நீ
என் வாழ்வும் நீயே
நீ வாழ நான்
கண்மூடுவேனே
ஆண் : …………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *