போகாதே நெஞ்சே பாடல் வரிகள்

Movie Nadhi
படம் நதி
Music Dhibu Ninan Thomas
Lyricist Thamarai
Singers         Anila Rajeev
Year 2022
பெண் : போகாதே நெஞ்சே உன்னை கெஞ்சி கேட்கிறேன்
போகாதே நீ போகாதே
 
பெண் : பாராதே கண்ணே உன்னை மூட சொல்கிறேன்
பாராதே ஓ பாராதே
 
பெண் : சிறகுகள் விரிந்து வான் நோக்கி
மேலே போவதென்ன
கவலைகள் கலைந்து காற்றோடு
காற்றாய்ப் போனதென்ன
 
பெண் : என் வெள்ளை உள்ளத்திலே
ஒரு கள்ளம் கால் வைக்குதே
ஓ என்றாலும் பொல்லாத
இன்பம் உள் ஊறுதே
 
பெண் : வானவில்லை காணவில்லை
வண்ணம் ஏழும் போதவில்லை
ஓவியங்கள் வாடலாமா
 
பெண் : தென்றல் ஒன்றை காணவில்லை
தேடி வந்த காற்றின் சொல்லை
உண்மையென்று நம்பலாமா
 
பெண் : மின்னல் கோலம் வான் எங்கும்
மஞ்சள் மேகம் தேன் சிந்தும்
கண் திறந்து பார்த்தால் சொப்பனம்
 
பெண் : அன்னை போல நீ வந்தாய்
அன்பை அள்ளி ஏன் தந்தாய்
கண்மூடும் போதெல்லாம் உன் முகம்
 
பெண் : கால்கள் இன்று மண்ணில் இல்லை
பாதம் ரெண்டும் பாவ வில்லை
வானம் தானே தீண்டும் எல்லை
 
பெண் : கைகள் இங்கே கைகள் இல்லை
கட்டுப்பட்டு நிற்கவில்லை
கட்டி கொள்ளும் ஆசை தொல்லை
 
பெண் : போகாதே நெஞ்சே உன்னை கெஞ்சி கேட்கிறேன்
போகாதே நீ போகாதே
 
பெண் : பாராதே கண்ணே உன்னை மூட சொல்கிறேன்
பாராதே ஓ பாராதே
 
பெண் : சிறகுகள் விரிந்து வான் நோக்கி
மேலே போவதென்ன
கவலைகள் கலைந்து காற்றோடு
காற்றாய்ப் போனதென்ன
 
பெண் : என் வெள்ளை உள்ளத்திலே
ஒரு கள்ளம் கால் வைக்குதே
ஓ என்றாலும் பொல்லாத
இன்பம் உள் ஊறுதே
 
பெண் : வானவில்லை காணவில்லை
வண்ணம் ஏழும் போதவில்லை
ஓவியங்கள் வாடலாமா
 
பெண் : தென்றல் ஒன்றை காணவில்லை
தேடி வந்த காற்றின் சொல்லை
உண்மையென்று நம்பலாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *