என் மேல் விழுந்த பாடல் வரிகள்

Movie Dejavu
படம் தேஜாவு
Music Ghibran
Lyricist Kadhirmozhi
Singers         Kapil Kapilan
Year 2022
ஆண் : என் மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சி பிழையே
நீயும் நிழலும் தான் துணையே
 
ஆண் : கை கோர்த்து வாழ்ந்த நாட்களே
என் ஈரல் காற்றை ஈர்க்குதே
உன் நினைவை உணவாய் உண்டு
வாழ்வது சுகமே
 
ஆண் : என் மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சி பிழையே
நீயும் நிழலும் தான் துணையே
 
ஆண் : ஹா ..ஆஆ…
மென் விரல் பட விலகிடும்
கவலைகள் இதோ
உன் நினைவுகள்
தலையை கோதுதே
உன் ஆடையின் தனியொரு
வாசனை இதோ
ஓர் மலரென அமர்ந்து பேசுதே
 
ஆண் : தேனீரின் வெற்று கோப்பை
உன் கைகள் பற்ற கேட்கும்
நீ சொன்ன வார்த்தை மட்டும்
என் நாட்கள் வாழ்ந்து பார்க்கும்
உன் பேரை உச்சரித்தால் ஆயுள் கூடுதே
நீ மட்டும் போதும் அன்பே மீண்டும் வந்திடு
 
ஆண் : என் மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சி பிழையே
நீயும் நிழலும் தான் துணையே
 
ஆண் : கை கோர்த்து வாழ்ந்த நாட்களே
என் ஈரல் காற்றை ஈர்க்குதே
உன் நினைவை உணவாய் உண்டு
வாழ்வது சுகமே
 
ஆண் : என் மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சி பிழையே
நீயும் நிழலும் தான் துணையே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *