நான் பாடும்
மௌன ராகம் பாடல் வரிகள்
Movie Name  Idhaya Kovil
திரைப்பட பெயர் இதய கோவில்
Music Ilayaraja
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam
Year 1985

ஆண் : நான் பாடும்
மௌன ராகம் என்
காதல் ராணி இன்னும்
 
ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
 
ஆண் : கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்
 
ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
 
ஆண் : உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு
 
ஆண் : ஏன் தேவி
இன்று நீ என்னைக்
கொல்கிறாய் முள்
மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்
 
ஆண் : உன்னைத்
தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது
 
ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
 
ஆண் : கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்
 
ஆண் : என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே
 
ஆண் : பூவும் வீழ்ந்து
போனது காம்பு என்ன
வாழ்வது
 
ஆண் : காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது
 
ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
 
ஆண் : கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்
 
ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Idhaya KovilIdhaya Kovil Songs LyricsIdhaya Kovil Lyrics, Idhaya Kovil Lyrics in TamilIdhaya Kovil Tamil Lyricsஇதய கோவில், இதய கோவில் பாடல் வரிகள், இதய கோவில் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *