கண்ணு பட போகுதையா பாடல் வரிகள்
Movie Name | Chinna Gounder |
---|---|
திரைப்பட பெயர் | சின்ன கவுண்டர் |
Music | Ilayaraja |
Lyricist | R.V. Udhaya Kumar |
Singer | Ilayaraja |
Year | 1992 |
குழு : ஊரு கண்ணு உறவு
கண்ணு நாய் கண்ணு நரி
கண்ணு நோய் கண்ணு
நொல்ல கண்ணு நல்ல
கண்ணு கொல்லி கண்ணு
கண்ட கண்ணு முண்ட
கண்ணு கரிச்சி கொட்டும்
எல்லா கண்ணும் கண்ட
பிணி தொலையட்டும்
கடுகு போல வெடிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்
நாடும் காடும் செழிக்கட்டும்
ஆண் : { கண்ணு பட
போகுதையா சின்ன
கௌண்டரே } (2)
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே உனக்கு
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே ஹே
குழு : கண்ணு பட
போகுதையா சின்ன
கௌண்டரே சுத்தி
போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே உனக்கு
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே
ஆண் : ஆமா
ஆண் : சாட்சிகளை
செட் அப் பண்ணும்
வேலை இங்கு இல்லே
இல்லே வக்கீலும் பொய்ய
சொல்லுற வாதம் இங்கு
வந்ததில்லே
ஆண் : ஏடெடுத்து
படிச்சதில்லே எவருக்கும்
நீ கொறைஞ்சதில்லே
வாக்கெடுப்பு நடந்ததில்லே
எதிலும் எப்போவும்
தோத்ததில்லே
ஆண் : { வீதியில ஒரு
வீரன் மனு நீதியில
நல்ல சோழன் } (2)
ஆண் : இந்த ஊருக்குள்ள
நீ தான் ஐயா எங்களுக்கு
தோழன் இந்த ஊருக்குள்ள
நீ தான் ஐயா எங்களுக்கு
தோழன் ஹோய்
குழு : கண்ணு பட
போகுதையா சின்ன
கௌண்டரே சுத்தி
போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே உனக்கு
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே
குழு : நாத்து நாடும்
வேளையிலே பாட்டு
ஒன்னு வேணும்
பாட்டுக்குள்ளே மாமனுக்கு
செய்தி சொல்ல வேணும்
ஏர் பிடிக்கும் கை பிடிச்சு
நான் நடக்க வேணும்
அந்த ஏழுமலை சாமி
வந்து ஆதரிக்க வேணும்
ஆண் : ஏர் எடுத்து நீ
நடந்தா மாலை வந்து
தோளில் விழும்
தோளிருக்கும் துண்டும்
அங்கே உன் கதைய
சொல்ல வரும்
ஆண் : முத்தான
பரம்பரை தான் குப்பனும்
சுப்பனும் அண்ணன் தம்பி
தான் எல்லோரும் ஒரு
முறை தான் ஏழையும்
சாலையும் சரிசமன் தான்
ஆண் : { ஐயாவோட
மானம் அந்த காவேரி
மானை மீறும் } (2)
ஆண் : அந்த காவேரி
மானு பரம்பரைக்கே
உன்னால தான் பேரு
காவேரி மானு பரம்பரைக்கே
உன்னால தான் பேரு
குழு : கண்ணு பட
போகுதையா சின்ன
கௌண்டரே சுத்தி
போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே உனக்கு
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே
ஆண் : ஆமா கண்ணு பட
போகுதையா சின்ன
கௌண்டரே சுத்தி போட
வேணுமய்யா சின்ன
கௌண்டரே உனக்கு
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே