தொடர்படு இடர் பாடல் வரிகள்

Movie FIR
படம் பிர்
Music Ashwath
Lyricist Mashook Rahman
Singers         Deepak Blue, Vishnu Vishal, Sugandh Shekar
Year 2022
ஆண் : தொடர்படு இடர் தரும்
அடர் இருள் சிறையில்
சுடர் தர ஏங்கிடும்
சிறு பொறி நானோ
விடைகளின் இருளினில்
புதிர்களை தேடும்
விடியலை காணா
கதிரவன் நானோ
ஆண் : கருவறை தாண்டி இருளிலே மீண்டும்
இருப்பது இன்று தான்
கருவறை தந்த மூச்சையே
இன்று இழக்கிறேன் சிறையில் நான்
இது சதிகளின் உலையா
இது சிலந்தியின் வலையா
என் உயிரணு உடைக்கும்
இது கந்தக சிறையா

ஆண் : என் உதிரத்தை பிரித்து
அதில் அமிலத்தை விதைத்து
என் சிறகுகள் எரித்தால்
அது நியாயம் தானா

ஆண் : பகை செய்கிறான் சிறை செய்கிறான்
வதை செய்கிறான் யா அல்லா
நிழல் செய்கிறான் நிஜம் பொய்கிறான்
வதம் செய்கிறான் யா அல்லா

ஆண் : கரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன்
அறம் வெல்லுமோ யா அல்லா
கரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன்
உந்தன் நாட்டம் இனி யா அல்லா

ஆண் : தொடர்படு இடர் தரும்
அடர் இருள் சிறையில்
சுடர் தர ஏங்கிடும்
சிறு பொறி நானோ
விடைகளின் இருளினில்
புதிர்களை தேடும்
விடியலை காணா
கதிரவன் நானோ

ஆண் : இது யுகங்களின் பகையா
இது தகித்திடும் வெறியா
எமை கருவறுத்திடவே
கரம் கோர்த்திடும் படையா
என் மனிதத்தை உடைத்தால்
என்னை மதத்திற்குள் அடைத்தால்
என் தேசியம் பறித்தால்
அது நியாயம் தானா

ஆண் : முகமதை கண்டு
அகமதை வெறுக்கும்
பிடியிலே இன்று நாம்
தரவுகள் செய்த
தவறுகள் இன்று
தீர்ப்பை சொல்லும் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *