நெஞ்சோடு வஞ்சமும் பாடல் வரிகள்

Movie FIR
படம் பிர்
Music Ashwath
Lyricist Mashook Rahman
Singers         Naresh Iyer
Year 2022
ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா
மெய்யாக மெய்யாக உண்மையும் நஞ்சடா
மழை சேர்ந்த அமிலம் நஞ்சோ
பகை நேர்ந்த மனிதம் நஞ்சோ
ஆண் : அடர் நஞ்சே படரும் நஞ்சே
அடங்கிடாயோ நீ
இடர் தாங்கும் மானுடமே எழுந்துடாயோ நீ

ஆண் : கடனாளும் பூமியின் மேலே
அலை ஆடும் அகதிகள் நாமே
அதிலும் ஏன் பிரிவினையோ

ஆண் : போர் எல்லாம் புனிதம் என்றால்
அமைதிக்கு ஓர் ஆலயம் ஏனோ
இனம் காக்க நர பலியோ
இதுவா நீ இதுவா நாம் எங்கு போகிறோம்
விடை இல்லா இருளோட மாயா போகிறோம்
மதமா நீ மதமா நான் கானல் மானிடா
இனவாதம் எனும் சாபம் இன்னும் ஏனடா

ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா
இனவாதம் மதவாதம் சகித்து நீ மீளடா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *