யாரும் எனக்கில்ல பாடல் வரிகள்

Movie Take Diversion
படம் டேக் டைவர்சன்
Music Jose Franklin
Lyricist Mohan Rajan
Singers         Yazin Nizar
Year 2022
ஆண் : யாரும் எனக்கில்லை ஏனடி
நானும் எனதில்லை நீயடி
காதல் நினைவுகள் நூறடி
மறந்தாயே கண்மணியே
 
ஆண் : விழும் கண்ணீரை வாங்கினால்
கடல் மேடேற கூடுமே
வலி இல்லாமல் காதலோ
புவி எங்கேயும் காணுமே
 
ஆண் : போதும் போதும் என்றாலும்
சேரும் ஒரு காலம்
வேண்டும் வேண்டும் என்றாலும்
போகும் ஒரு நேரமே
 
ஆண் : பாதம் ரெண்டும் என்றாலும்
பாதை நூறு தானே
பார்வை மாற்றி நீ போக
யாவும் மாறுமே
 
ஆண் : போதும் போதும் என்றாலும்
சேரும் ஒரு காலம்
வேண்டும் வேண்டும் என்றாலும்
போகும் ஒரு நேரமே
 
ஆண் : பாதம் ரெண்டும் என்றாலும்
பாதை நூறு தானே
பார்வை மாற்றி நீ போக
யாவும் மாறுமே
 
ஆண் : நூறு பறவைகள் வானிலே
சேர்ந்து பறப்பதை போலவே
நானும் பறக்கிறேன் காதலே
உன்னாலே கண்மணியே
 
ஆண் : நிழல் என்மீது சாய்கையில்
நிலைக் கொள்ளாமல் போகிறேன்
விழி நிர்க்காமல் பேசையில்
அலை போலிங்கு ஆகுறேன்
 
ஆண் : கூறு போடும் கண்ணாலே
கூட்டி போகும் பெண்ணே
கூடு பாயும் அன்பாலே
நானும் வீழ்கிறேன்
 
ஆண் : என்னை மீறி என் நெஞ்சம்
உன்னை தேடும் கண்ணே
என்ன மாயம் நீ செய்தாய்
உன்னைக் கேட்கிறேன்
 
ஆண் : கூறு போடும் கண்ணாலே
கூட்டி போகும் பெண்ணே
கூடு பாயும் அன்பாலே
நானும் வீழ்கிறேன்
 
ஆண் : என்னை மீறி என் நெஞ்சம்
உன்னை தேடும் கண்ணே
என்ன மாயம் நீ செய்தாய்
உன்னைக் கேட்கிறேன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *