சுவாசமே சுவாசமே பாடல் வரிகள்
Movie | O2 | ||
---|---|---|---|
படம் | O2 | ||
Music | Vishal Chandrashekhar | ||
Lyricist | Mohan Rajan | ||
Singers | Brindha Sivakumar | ||
Year | 2022 |
பெண் : எனது கருவில் பூத்த
ஓர் இளைய நிலவு நீ
எனது விழியில் வாழும்
எதிர்கால கனவு நீ
பெண் : உலகிலே எதுவுமே
முழுமை இல்லையே
விழிகளின் நிறங்களோ
கருப்பு வெள்ளையே
பெண் : புயல் காற்றாய் ஒரு தேடல்
இன்று தென்றல் ஆனதே
பெண் குழு : சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே
பெண் : அழகின் வடிவம் நீ
எந்தன் உயிரின் உருவம் நீ
என் இதழின் ஓரம்
மலரும் சிரிப்பு நீ
பெண் : வளரும் கவிதை நீ
எந்தன் வாழ்வின் பொருளும் நீ
கண் உறங்கும் பொழுதில்
மலரும் கனவு நீ
பெண் : இந்த உறவை போல
உலகில் வேறு உறவு இல்லயே
உயர பறக்கும் பறவை
நமக்கும் எல்லை இல்லயே
உன்னை ஈன்ற பொழுதை
மீண்டும் உணர போகிறேன்
பெண் குழு : சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே