கண்கொத்தி பறவையே பாடல் வரிகள்

Movie Vattam
படம் வட்டம்
Music Nivas K. Prasanna
Lyricist Mohan Rajan
Singers         Nivas K. Prasanna
Year 2022
குழு : ………………..
 
ஆண் : கண்கொத்தி பறவையே
ஒன்னசுத்தி ஒன்னசுத்தி
கண்டபடி கண்ணுமுழி
கண்ணிவச்சி சுத்துதடி
என்ன செய்ய தெரியலையே
சொல்ல ஒண்ணும் வழியில்லையே
 
ஆண் : முன்னெத்தி அழகியே
ஒன்னபத்தி ஒன்னபத்தி
மெச்சுதடி நெஞ்சுக்குழி
சத்தம்போட்டு சுத்துதடி
நல்ல தூக்கம் எனக்கில்லயே
நல்லதான்னு புரியலையே
 
ஆண் : ஓ சொல் வித்தைக்காரியே
உன் கண்ணால கையால ஓயாம பேசுர
முத்தத்தில் கீரியே
என் உள்ளாற நீ வந்து சொன்னாயே
வசியச்சியே விழவச்சியே
உயிர்பிச்சியே தீ வச்சியே
 
ஆண் : என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தாயடி
உன் பேச்சிலே சாய்த்தாயடி வீழ்ந்தேனடி
 
ஆண் : என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தயடி
உன் பேச்சிலே வீழ்த்தாயடி சாய்ந்தேனடி
 
ஆண் : தேன்மொழி தேன்மொழி சாகிறேன் நானடி
குழு : ………..
ஆண் : தேன்மொழி தேன்மொழி சாகிறேன் நானடி
 
ஆண் : ஒன்னோட சிரிப்புல ஒன்னோட மொறப்புல
ஒன்னோட அணைப்புல ஏதோ ஆகுறேன்
ஒன்னோட வனப்புல ஒன்னோட பேச்சுல
ஒன்னோட மூச்சுல தீ நான் காயுறேன்
 
ஆண் : கைப்புடிச்சி என்ன வேர்க்க வைக்கிற
எதையும் எதையோ நெனைக்க வைக்கிற
மனசு எல்லாம் பூக்க வைக்கிற
மழை அடிச்சி மணக்க வைக்கிற
 
ஆண் : ஒன்னவிட்டு பிரியாம நானும்
இப்படியே இருக்கவா?
விரலிடுக்கில் விரல் சேர்த்து
நூல் போட்டு தைக்கவா
 
ஆண் : கண்கொத்தி பறவையே
ஒன்னசுத்தி ஒன்னசுத்தி
கண்டபடி கண்ணுமுழி
கண்ணிவச்சி சுத்துதடி
என்ன செய்ய தெரியலையே
குழு : என்ன செய்ய தெரியலையே
ஆண் : சொல்ல ஒண்ணும் வழியில்லையே
குழு : சொல்ல ஒண்ணும் வழியில்லையே
 
ஆண் : முன்னெத்தி அழகியே
ஒன்னபத்தி ஒன்னபத்தி
மெச்சுதடி நெஞ்சுக்குழி
சத்தம்போட்டு சுத்துதடி
நல்ல தூக்கம் எனக்கில்லயே
குழு : நல்ல தூக்கம் எனக்கில்லயே
ஆண் : நல்லதான்னு புரியலையே
 
ஆண் : சொல் வித்தைக்காரியே
உன் கண்ணால கையால ஓயாம பேசுர
முத்தத்தில் கீரியே
என் உள்ளாற நீ வந்து சொன்னாயே
வசியச்சியே விழவச்சியே
உயிர்பிச்சியே தீ வச்சியே
 
ஆண் : என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தாயடி
உன் பேச்சிலே சாய்த்தாயடி வீழ்ந்தேனடி
 
ஆண் : லாலா ல லா .. (7)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *