தலுக்கி தலுக்கி பாடல் வரிகள்

Movie Name  Kizhakku Vasal
திரைப்பட பெயர் கிழக்கு வாசல்
Music Ilayaraja
Lyricist R.V. Udhaya Kumar
Singer S. P. Balasubrahmanyam
Year 1990

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண் : சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண் : சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண் : மஞ்ச வாத்து நடையப் பார்த்து
நெஞ்சோரம் இந்நேரம் நோயாச்சு
ஹா கொஞ்ச வார புளியங்காத்து
பிஞ்சாகி அஞ்சாறு நாளாச்சு

ஆண் : கரும்பு கரும்புதான் – கடிக்குதே
எறும்பு எறும்புதான் – வயசுல
அரும்பு அரும்புதான் – மனசுல
துரும்பு துரும்புதான் – அழகுல

ஆண் : முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண் : சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண் : பண்ண மாடு காளையப் பாத்து
திண்டாடித் திண்டாடி ஓடாதா
ஹோய் தின்ன சோறு ஜீரணமாக
வம்போடு தும்போடு வாராதா

ஆண் : மொறச்சு மொறச்சுதான்-மயக்குது
வெறச்சு வெறச்சுதான்-நடக்குது
வரப்பு வரப்புதான்-வழுக்குது
தடுக்கி விழுந்துதான்-தவிக்குது

ஆண் : பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு
பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண் : தளுக்கித் தளுக்கித் தரிகிட
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண் : சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண் : சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண் : சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

Tags: Kizhakku Vasal, Kizhakku Vasal Songs Lyrics, Kizhakku Vasal Lyrics, Kizhakku Vasal Lyrics in Tamil, Kizhakku Vasal Tamil Lyrics, கிழக்கு வாசல், கிழக்கு வாசல் பாடல் வரிகள், கிழக்கு வாசல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *