பாடி பறந்த கிளி பாடல் வரிகள்

Movie Name  Kizhakku Vasal
திரைப்பட பெயர் கிழக்கு வாசல்
Music Ilayaraja
Lyricist R.V. Udhaya Kumar
Singer S.P. Balasubrahmanyam
Year 1990

ஆண் : ……………………….

ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே

ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)

ஆண் : { ஒத்தயடிப் பாதையில
நித்தமொரு கானமடி அந்த
வழி போகையில காது
ரெண்டும் ஊனமடி } (2)

ஆண் : கண்ட கனவு
அது கானா ஆச்சு
கண்ணு முழிச்சா அது
வாழாது வட்ட நிலவு
அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது

ஆண் : வீணாச
தந்தவரு யாரு
யாரு

ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)

ஆண் : { சொல்லெடுத்து
வந்த கிளி நெஞ்செடுத்துப்
போனதடி நெல்லறுக்கும்
சோலை ஒன்னு
நெல்லரிச்சிப் போனதடி } (2)

ஆண் : கல்லிலடிச்சா
அது காயம் காயம்
சொல்லிலடிச்சா அது
ஆறாது பஞ்சு வெடிச்சா
அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா
அது தாங்காது

ஆண் : சேதாரம்
செஞ்சவரு யாரு
யாரு

ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே

ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)

Tags: Kizhakku Vasal, Kizhakku Vasal Songs Lyrics, Kizhakku Vasal Lyrics, Kizhakku Vasal Lyrics in Tamil, Kizhakku Vasal Tamil Lyrics, கிழக்கு வாசல், கிழக்கு வாசல் பாடல் வரிகள், கிழக்கு வாசல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *