ஸ்ரீ வள்ளி ‍ நான் பாக்குறேன் பாடல் வரிகள்

Movie Pushpa
படம் புஷ்பா
Music Devi Sri Prasad
Lyricist Viveka
Singers         Sid Sriram
Year 2021
நான் பாக்குறேன் பாக்குறேன்
பாக்காம நீ எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற என்ன தவிர
 
காணாத தேய்வத்த
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நானிருந்தும்
கடந்து போகிறியே
 
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா
 
கூட்டத்துல போனா
நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து
தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்கத்தான்
தலை குனிஞ்சேன்டி புள்ள
 
பாதகத்தி உன்ன நான்
பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறியே
பாவம் பாக்காம
 
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா
………………..
 
நீ ஒண்ணும் பெரிய
பேரழகி இல்ல
தேறாத கூட்டத்தில் அழகா
தெரியுறடி புள்ள
பதினெட்டு வயச
தொட்டாலே போதும்
நீ இல்ல எல்லா பொண்ணும்
தினுசா தான் தோணும்
 
குத்துக்கல்லுக்கு சேல கட்டி
விட்டா கூட சிட்டா தெரியும்
கொத்து பூவ கூந்தலில்
வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்
ஆனா
 
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *