பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் வரிகள்

Movie Name  Jeans
திரைப்பட பெயர் ஜீன்ஸ்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer P. Unnikrishnan and Sujatha Mohan
Year 1998

பெண் : ……………………………

ஆண் : பூவுக்குள்
ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : வண்ணத்துப்
பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : துளைசெல்லும்
காற்று மெல்லிசையாதல்
அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : அதிசயமே அசந்து
போகும் நீ எந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
ஓ ஹோ

ஆண் : பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
ஓ ஹோ

பெண் : பூவுக்குள்
ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
பெண் : ……………………………

பெண் : வண்ணத்துப்
பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்
பெண் : ……………………………

பெண் : துளைசெல்லும்
காற்று மெல்லிசையாதல்
அதிசயம்
பெண் : ……………………………

பெண் : குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : அதிசயமே அசந்து
போகும் நீ எந்தன் அதிசயம்

ஆண் : ……………………………
பெண் : ……………………………

பெண் : ஒரு வாசமில்லாக்
கிளையின் மேல் நறுவாசமுள்ள
பூவை பாா் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும்
அதிசயமே

ஆண் : மின்சாரம் இல்லாமல்
மிதக்கின்ற தீபம்போல் மேனி
கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

பெண் : கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
ஓ ஹோ

பெண் : பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
ஓ ஹோ

ஆண் : பூவுக்குள்
ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : வண்ணத்துப்
பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : துளைசெல்லும்
காற்று மெல்லிசையாதல்
அதிசயம்
பெண் : ……………………………

பெண் : குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : அதிசயமே அசந்து
போகும் நீ எந்தன் அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : பெண்பால் கொண்ட
சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் பூவே நீ எட்டாவது
அதிசயமே வான் மிதக்கும் உன்
கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே

ஆண் : நங்கைகொண்ட
விரல்கள் அதிசயமே நகம்
என்ற கிரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பெண் : ஓ ஹோ

பெண் : பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

ஆண் : பூவுக்குள்
ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம்
பெண் : அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : வண்ணத்துப்
பூச்சி உடம்பில்
ஓவியங்கள்
பெண் : அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : துளைசெல்லும்
காற்று மெல்லிசையாதல்
பெண் : அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : குருநாதர் இல்லாத
குயில் பாட்டு
பெண் : அதிசயம்
பெண் : ……………………………

ஆண் : அதிசயமே அசந்து
போகும் நீ எந்தன் அதிசயம்

ஆண் : ……………………………
பெண் : ……………………………

Tags: Jeans, Jeans Songs Lyrics, Jeans Lyrics, Jeans Lyrics in Tamil, Jeans Tamil Lyrics, ஜீன்ஸ், ஜீன்ஸ் பாடல் வரிகள், ஜீன்ஸ் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *