நீதான் என் கனவு மகனே பாடல் வரிகள்
Movie | Thamezharasan | ||
---|---|---|---|
படம் | தமிழரசன் | ||
Music | Vijay Narain | ||
Lyrics | Palani Barathi | ||
Singers | S. P. Balasubramaniam | ||
Year | 2020 |
ஆண் : நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
ஆண் : மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
ஆண் : நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
மழையாய் கருணை
பொழிவான் இங்கு அவனே
ஆண் : நீதான் என் கனவு மகனே
ஆண் : ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இது தானே நாம் கண்ட
உண்மை உலகில்
ஆண் : வழிகளை அறியாத
இந்த வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு
என்றும் தோல்விகள் இனி இல்லை
தெய்வம் கை விடுமா
ஏதும் இல்லாதார் வாழ்விலே
ஆண் : நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
ஆண் : நீதான் என் கனவு மகனே
ஆண் : தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீக்கூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்
ஆண் : கனவுகள் மெய் ஆகும்
அது கற்பனை கிடையாது
அழைத்திடும் திசை எங்கும்
இனி நீ வந்து விளையாடு
காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே
ஆண் : நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
ஆண் : மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
ஆண் : நீதான் என் கனவு மகனே……