தட தடவென ரயில் வரும் பாடல் வரிகள்

Movie The Warrior
படம் தி வாரியோர்
Music Devi Sri Prasad
Lyricist Shreemani
Singers         Haricharan
Year 2022
ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்
ஆண் : அவள் அடித்திடும் விசில் ஒலிகளில்
கசல் கவிதையின் சாயல்
தேன் குடித்தது போல் திரிந்தேனே
பிரமிடுகளின் அருகினில்
ஒரு சிறு எறும்பினை போலே
அவள் எதிரினில் நான் உணர்ந்தேனே

ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்

ஆண் : நதிகளின் திசையை பறவைகள் அறியும்
அவள் வரும் திசையை என் இதயம் அறியும்
அவள் முகம் தெரியும் ஒவ்வொரு முறையும்
முதல் முறை போலே என் விழிகள் விரியும்

ஆண் : அரைகுறையாய் உறக்கம்
அலை அலையாய் மயக்கம்
அருகிருந்தால் அதுவே போதும்

ஆண் : தெரு முனையில் நடப்பாள்
மறு முனையும் அதிரும்
அவளின் அழகின் உயரம் அளக்கும்
கருவி இல்லையே

ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்

விசில் : ………….

ஆண் : சிறகில்லை பறந்தேன்
வழி இல்லை நடந்தேன்
அவள் முகம் பார்க்க
என் நாட்கள் துடிக்கும்

ஆண் : கரு நிற கூந்தல்
செருகிய பூவில்
ஒரு இதழ் கிடைத்தால்
என் உலகம் மணக்கும்

ஆண் : நடு கடலென மௌனம்
சுமந்திடும் என் இதயம்
திடும் என அவள் பார்த்தால் துள்ளும்
அலைவரிசையின் அழகி
பண்பலையில் உருகி
விரலும் விரலும் உரசும் நிமிடம்
மின்னல் அடிக்குமே

ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்

விசில் : ………….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *