தேவராளன் ஆட்டம் பாடல் வரிகள்

Movie Ponniyin Selvan – Part 1
படம் பொன்னியின் செல்வன்
Music A. R. Rahman
Lyricist Ilango Krishnan
Singers         Yogi Sekar
Year 2022
பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே..( 4)
 
ஆண் குழு : செக் செக் செக் செக் செக்….( 6)
செக் செக் செக் செகப்பண
செக் செக் செக் செகப்பண
செக் செக் செக் செக் செக்
செக் செக் செக் செக் செக்
செக் செக் செக் செகப்பண
செக் செக் செக் செகப்பண
 
ஆண் குழு : பொட் பொட் பொட் பொட்
 
ஆண் குழு : பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் படவென…(6)
 
ஆண் குழு : {ஊன் பற்ற கேட்ட உடலை
வாள் பெற்று கெட்டழிக்கவே} (2)
 
பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே..(4)
 
ஆண் குழு : {சூடானது சூடானது
சூடானது யுத்தம்
சூடானது சூடானது
சூடானது ரத்தம்
 
ஆண் குழு : போராடுது போராடுது
போராடுது சித்தம்
தீராதது தீராதது
தீராதது வெறிச்சத்தம்} (2)
 
ஆண் குழு : கொத்துப்பறை
கொத்துப்பறை கொட்டு
ரத்தசெறு ரத்தசெறு
ரத்தசெறு வெட்டு
 
ஆண் குழு : கொட்ட பகை கொட்ட பகை
கொட்ட பகை வெட்டு
துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு
 
ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே
மனுக்கேட்டுனை ஓதிடுதே
ஒரு தாட்சிணி தீயுடனே
அதை ஆற்றிடவா பேயனே
 
பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே…(4)
 
ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே
மனுக்கேட்டுனை ஓதிடுதே
ஒரு தாட்சிணி தீயுடனே
அதை ஆற்றிடவா பேயனே
 
ஆண் : செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே
என் குடிய காப்போனே
 
ஆண் : கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருதா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்
 
ஆண் : மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
ஒப்புகழி தாங்கிடுமா
கைகளும் ஓங்கிடுமா
 
ஆண் குழு : {வருண்டா கோடடா எடுடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு} (2)
 
ஆண் : மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
ஒப்புகழி தாங்கிடுமா
கைகளும் ஓங்கிடுமா
 
ஆண் குழு : {கொட்டுப்பறை கொட்டெழுந்திட
சுட்டுப்பகை கெட்டழிந்திட
கொச்சக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுட்ட பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
 
ஆண் குழு : வேந்தன் குடி கேட்டாள் பூதவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு} (4)
 
ஆண் குழு : பலிகொடு பலிகொடு…(3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *