அலைகடல் ஆழம் பாடல் வரிகள்

Movie Ponniyin Selvan – Part 1
படம் பொன்னியின் செல்வன்
Music A. R. Rahman
Lyricist Siva Ananth
Singers         Antara Nandy
Year 2022
பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ..ஆஆ…
 
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ
ஏலோ ஏலேலோ
 
பெண் : பாத மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள் தானோ
 
பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள
ஏலோ ஏலேலோ
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல
ஏலோ ஏலேலோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
 
பெண் : இன்பம் துன்பம் ரெண்டும்
இடம் பொருள் மாறும்
இரவுகள் பகல் ஆகும்
முகில் மழை ஆகும்
முறுவலும் நீர் ஆகும்
 
பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வரதோ அருங்காலையில் நம் பூமியில்
 
பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட
மறு கரை ஏறிட
பல பல பிறவிகள் கொள்வேனோ
சொல்லிடு
 
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
 
பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாய் இன்றி கருவான ஓர் உயிரா
ஆதாரம் இல்லாத காதலா
 
பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா
தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ
 
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ
ஏலோ ஏலேலோ
 
பெண் : பாத மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள் தானோ
 
பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள
ஏலோ ஏலேலோ
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல
ஏலோ ஏலேலோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *