அவளோ அவளோ நிலவின் போதை பாடல் வரிகள்

Movie Vasantha Mullai
படம் வசந்த முல்லை
Music Rajesh Murugesan
Lyricist Vivek
Singers         Gowtham Bharadwaj
and Rajesh Murugesan
Year 2022

வசனம் : ………………..

 
ஆண் : சொல்லாத வார்த்தைகள் சுவையானவை
அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை
சொல்லுக்குள் உன்னை சுருக்கி விட மனம் இல்லை
அளவில்லா உணர்வுகளை அரை பக்கத்தில் அடைத்து வைக்கும்
ஆசையும் இருந்ததில்லை
 
ஆண் : உன் நெற்றி பரப்பில் என் விரல் தொடும் போதும்
உன் கழுத்தில் பரவி என் மூச்சு சுடும் போதும்
உன் உயிரை எழுப்ப நான் முத்தம் இடும் போதும்
புரிந்துகொள் என் பேரன்பை
 
ஆண் : சொல்லாத வாரத்தைகள் சுவையானவை
அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை
 
ஆண் : அவளோ அவளோ நிலவின் போதை துகளோ
அவளோ அவளோ கார் குழல் விரியும் மயிலோ
திசை அறியாத மேகம்
தலையினில் விழுதோ
கடவுள் கை கொண்டு எழுத முடியாத
கவிஞனின் கற்பனையோ…..
 
ஆண் : கோதை மடியில் தோகை கனவு
கோதும் விரலாக என் வாழ்வே
தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா
தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானா….ஆ…..
 
ஆண் : தூரிகை காரிகை
நீ செய்த வண்ணங்கள் நான்
உன்னை போலே என் பிம்பம்
உள்ளே வாழ்வது நானா…….நீதானா
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
 
ஆண் : ………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *