Movie Name | Muthal Mariyathai |
---|---|
திரைப்பட பெயர் | முதல் மரியாதை |
Music | Ilayaraja |
Lyricist | Vairamuthu |
Singer | Malaysia Vasudevan, S. Janaki |
Year | 1985 |
ஆண் : ஏறாத மல மேலே…. ஆ…
எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா… ஆ…
எசப் பாட்டு படிக்கட்டுமா
எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா
ஆண் : ஏறாத மல மேலே….
பெண் : ஆ…
ஏ… எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பி விட
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
ஆண் : ஏ புள்ள சரோசா
இங்க எவளாது
எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக
பெண் : ஏனுங்க நாங்க பாட்டு பாடற
மாறியா இருக்கோம்
உங்க பாட்டுக்கு எசை பாட்டு
பாட முடியுமா
ஆண் : எலே ராக்கு நீ பாடுனவ
பெண் : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான்
கொரசல் ஆக்கும்
ஆண் : அடி மாங் குலத்து கர மேல… ஏ…
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து…
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
ஆண் : பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பெண் : பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
ஆண் : அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப
பெண் : ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஆண் : ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
அடி ஓடப் பக்கம்….