யம்மாடியம்மா சொல்லிட்டாளே பாடல் வரிகள்

Movie Pulikkuthi Pandi
படம் புலிக்குத்தி பாண்டி
Music N. R. Raghunanthan
Lyrics Mohan Rajan
Singers         Jagadeesh Kumar
Year 2021
ஆண் : தா நன்னா னா
தன நன்னா நன்னா னா
தா நன்னா னா
தன நன்னா நன்னா நன்னா நனனே

ஆண் : தா நன்னா னா
தன நன்னா நன்னா னா
தா நன்னா னா
தன நன்னா நன்னா நன்னா நனனே

ஆண் : யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா
என்னோட மூச்சில் காத்தில் கொடுத்து விட்டேன் உம்மா

ஆண் : பொல்லாத ஆலமரம்
சாச்சிடுச்சே வாழமரம்
கேக்காம கெடைச்சுடுச்சே
உள்ளுக்குள்ள நெனச்ச வரம்
உன்னால நூறு தரம்
சிரிக்கிறேன் நானும் தினம்
சொல்லாம நுழைஞ்சிடுச்சே
எனக்கும் அந்த காதல் ஜுரம்

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்
ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்

ஆண் : அவளது பூ வாசம் மனசுல தீ வீசும்
அட மழை நெனைப்பால கொடுக்குற ஜலதோஷம்
அடிக்கடி கண் பேசும் அதுதான் சந்தோசம்
அடியே அன்பால எழுதல இதிகாசம்

ஆண் : முத்தம் நான் கேட்டு பக்கம் போகையில்
புருவம் அருவாளா மாறி தொலைக்கும்
வேணாம் வம்புன்னு தூரம் போகையில்
உதடு ஹல்வாவ என்னை அழைக்கும்

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்
ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்

ஆண் : வெறப்பு குறையாமா இருந்தேன் பல நாளா
உன்னை நான் பார்த்து விழுந்தேன் தலைகீழா
எதுக்கு பொறந்தேன்னு நெனைப்பேன் சில நேரம்
என்னை நீ பார்த்த எனக்கு அது போதும்

ஆண் : உள்ளங்கால சுத்த வைக்கிறா
உச்சம் தலைக்குள் ஏறி நிக்கிறா
தன்னந்தனியா பேச வெக்கிறா
என்னை கண்ண தொறந்தே தூங்க வெக்கிறா

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்
ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *