சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் பாடல் வரிகள்
Movie | Pulikkuthi Pandi | ||
---|---|---|---|
படம் | புலிக்குத்தி பாண்டி | ||
Music | N. R. Raghunanthan | ||
Lyrics | Mohan Rajan | ||
Singers | Srinisha | ||
Year | 2021 |
பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம
என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம
பெண் : சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வெச்சானே
பத்து முறை பவுடர் அள்ளி பூச வெச்சானே
வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே
ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே
பெண் : ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே
ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே
பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம
என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம
பெண் : அவன் போட்ட சட்டை இருக்கு
நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு
என் முந்தானையில் அவன் மொகத்த
நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு
பெண் : கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு
வானம் தாண்டி தான் போக தோனுச்சு
கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு
வானம் தாண்டி தான் போக தோனுச்சு
பெண் : அரணா கொடியாட்டம்
அவன சுத்தி கெடப்பானே
அரை நொடி பிரிஞ்சாலும்
நான் பித்து பிடிப்பேனே
பெண் : ………………………
பெண் : அவன் கால் அழக பார்த்து பார்த்துதான்
வைகை நதிக்கரைய கட்டி வெச்சாங்க
அவன் தோள் அழக பார்த்த பின்னாலே
வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க
பெண் : ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா
ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா
பெண் : அழகர் தேராட்டாம்
அவன் நடையும் இருக்கும்டா
ஆயுள் முழுக்க நான்
அவன் நிழல்லா நடப்பேன்டா