வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது பாடல் வரிகள்

Movie Thilagar
படம் திலகர்
Music Kannan
Lyricist Sarathy
Singers         Haricharan,
Swetha Mohan
Year 2023
ஆண் : இதயம் அது இடப்புறம் இல்ல
அது நகர்ந்து கொண்டு வலப்புறம் செல்ல
எனக்குள் என்ன நடந்தது மெல்ல
உனக்கு மட்டுமே தெரியுமே புள்ள
 
ஆண் : வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது
சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது
கரந்த பாலு போல
நொரைச்சேன் காதலாலா
 
ஆண் : சுழண்டு சுழண்டு நீ ஓடுற போது
ஒழண்டு ஒழண்டு நீ தேடுற போது
பருத்தி பஞ்சு போல
அட பறக்கும் நெஞ்சு மேல
 
ஆண் : உண்டிவில்லு கல்லென மாத்தி
சுண்டிவிட்டு செல்லுற ஆத்தி
அரிசி பான எறும்பு போல
நீ தின்னடி என்ன
 
ஆண் : வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது
சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது
கரந்த பாலு போல
நொரைச்சேன் காதலாலா
 
குழு : ……………
 
பெண் : சுண்ணாம்பில் பல் தேச்சி
நாக்கு சிவந்தேனே
ஆண் : மம்பட்டியால நான்
மீசை செரச்சேனே
 
பெண் : கொப்புரானே இப்பத்தானே
சக்கரைப் பந்தலில்
பூண்டுடன் இஞ்சியும் சேர்த்தேனே
 
ஆண் : வீட்டின் உள்ளே பட்டம் விட்டேனே
சட்டை மேல பனியன போட்டேனே
 
பெண் : கலகம் மூட்டிய கள்ளனே உன்னால்
திலகம் நீட்டிய திலகனே உன்னால்
கிறங்கி போகுறேனே
ஹ கிறுக்கி ஆகுறேனே
 
குழு : ……………..
 
பெண் : உன்னோட பந்தக்கால்
நாணாய் இருப்பேனே
உன்னோட சொந்தத்தில்
என்ன கரைப்பேனே
 
பெண் : கொண்டக்குள்ள பின்னல் போல
அன்புல உன்னையும்
நெஞ்சுல பின்னியும் வைப்பேனே
 
ஆண் : நம் போல் ஜோடி இங்கே யாருண்டு
ஒன்றில் ஒன்றாய் வாழ்வோம் நூறாண்டு
 
பெண் : வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது
சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது
கரந்த பாலு போல
நொரைச்சேன் காதலாலா
 
ஆண் : சைவமுன்னு சொன்னியே முன்ன
மெல்ல மெல்ல திண்ணியே என்ன
ஓரச்சனா கரிச்சனா ..ஹே ..இனிச்சனா
 
பெண் : ஹாஹாஹா …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *