வெள்ளி நிலவொளி வீடு பாடல் வரிகள்
Movie | Eeswaran | ||
---|---|---|---|
படம் | ஈஸ்வரன் | ||
Music | S. Thaman | ||
Lyrics | Yugabharathi | ||
Singers | ML Gayathiri | ||
Year | 2021 |
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
அழகிய உறவு தானே
என்றும் எங்கே ஆனந்தம்
கனவுகள் கலைந்திடாமல்
கைகள் சேர பேரின்பம்
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
காற்று வீசும்
மரங்கள் அல்ல உறவுகள்
அது கலந்து வாழும்
அழகை காட்டும் கவிதைகள்
தீபம் ஏற்றும் பொழுதே
நல்ல நினைவுகள்
அது சுடராய் மாறி
உயிரை மீட்டும் இனிமைகள்
பட்டு தெறித்திடும் மின்னல் வீழ்த்தின
பாசம் விரலை நீட்டுதே
வெட்ட வெளியிலும் மொட்டும் மலர்ந்திட
கண்ணில் வசந்தம் பூக்குதே
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு