உயிரினும் உயர்ந்தது பாடல் வரிகள்

Movie Ayngaran
படம் ஐங்கரன்
Music G. V. Prakash Kumar
Lyrics Madhan Karky
Singers         Hariharan
Year 2019
ஆண் : உயிரினும் உயர்ந்தது
பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி கிடையாது
மனிதனை மனிதனும்
விழுங்கிடும் போது
கனவுகள் உயிர் பெற வழி கிடையாது
ஆண் : கீழே மிகக் கீழே
நம்பிக்கை புதையுதடா…..
மேலே அதன் மேலே
எல்லாமே சிதையுதடா….
ஆண் : பிறருக்கு வரந்தரா
அறிவென்ன அறிவு
இருளினை நிறுத்திடு ஐங்கரனே
கருங்கருங்குழியினில்
சுருங்குது மனிதம்
ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே
ஆண் : ஏன் இது ஏன்?…..
எமை நாமே அழிப்பது ஏன்?…..
ஏன் அது ஏன்?…..
பிறகுன்னை பழிப்பது ஏன்?…..
ஆண் : பொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம்
பொசுக்கிட வா வா ஐங்கரனே…
நன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம்
நசுக்கிட வா வா ஐங்கரனே…..
ஆண் : ஹா…..ஆஆ…..ஆஆ…..ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ…
ஆண் : தீ ஒரு தீ
இதயத்தில் முளைக்குதடா
ஊர் முழுதும்
ஒரு சேர்ந்தே அணைக்குதடா
ஆண் : முடிந்திடும் முடிந்திடும்
முடிந்திடும் என்றே
உறுதியை கொடுத்திடு ஐங்கரனே
விடிந்திடும் விடிந்திடும்
விடிந்திடும் என்றே
இரவினை முடித்திடு ஐங்கரனே
ஆண் : உயிரினும் உயர்ந்தது
பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி கிடையாது
மனிதனை மனிதனும்
விழுங்கிடும் போது
கனவுகள் உயிர் பெற வழி கிடையாது
ஆண் : கீழே மிகக் கீழே
நம்பிக்கை புதையுதடா….
மேலே அதன் மேலே
எல்லாமே சிதையுதடா…..
ஆண் : பிறருக்கு வரந்தரா
அறிவென்ன அறிவு
இருளினை நிறுத்திடு ஐங்கரனே
கருங்கருங்குழியினில்
சுருங்குது மனிதம்
ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *