நான் பிழை நீ மழலை பாடல் வரிகள்

Movie Kaathu Vaakula Rendu Kadhal
படம் காத்துவாக்குல ரெண்டு காதல்
Music Anirudh Ravichander
Lyricist Vignesh Shivan
Singers         Ravi G and Shashaa Tirupati
Year 2022
ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
 
ஆண் : நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை
 
பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே
 
ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே ..ஓ ஓ
 
ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
 
ஆண் : நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை
 
ஆண் : அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்
 
பெண் : அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்
 
ஆண் : அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்
 
பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே
 
ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே ..ஓ ஓ
 
ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
 
ஆண் : நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *