நான் பார்த்த முதல் முகம் நீ பாடல் வரிகள்

Movie Valimai
படம் வலிமை
Music Yuvan Shankar Raja
Lyricist Vignesh Shivan
Singers         Sid Sriram
Year 2022

ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ

நான் கேட்ட முதல் குரல் நீ
 
ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
 
ஆண் : நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
 
ஆண் : சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடு தான்
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு தான்
 
ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
 
ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே
 
ஆண் : உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வரைந்து வைத்தாயே
 
ஆண் : ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே
 
ஆண் : விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையாய்
நான் என்ன தான் தருவதோ..ஓ ..ஓ ..
 
ஆண் : அம்மா… ஓ அம்மா..!
அம்மா ஆ அ அஅ
 
ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
 
ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)
என் உலகம் நீ என் தாயே .. ஓ.. ஓ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *