கண்ணாமூச்சி ஏனடா பாடல் வரிகள் 

Movie Name  Kandukondain Kandukondain
திரைப்பட பெயர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer K. S. Chithra and Shahana
Year 2000

பெண் : கண்ணாமூச்சி ஏனடா
கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா

பெண் : {கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா} (2)

பெண் : {அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும்
கேட்டேன்} (2)

பெண் : {வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை} (2)
{இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்} (2)

பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…..

பெண் : {என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா} (2)
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது

பெண் : உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ….
உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா

பெண் : {பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்} (2)

பெண் : என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா….

பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண் : {வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்} (2)
கண்மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்

பெண் : நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா

பெண் : தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா……

பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Kandukondain Kandukondain, Kandukondain Kandukondain Songs Lyrics, Kandukondain Kandukondain Lyrics, Kandukondain Kandukondain Lyrics in Tamil, Kandukondain Kandukondain Tamil Lyrics, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *