காதல் சைக்கோ பாடல் வரிகள்
Movie | Saaho | ||
---|---|---|---|
படம் | சகோ | ||
Music | M. Ghibran | ||
Lyrics | Madhan Karky | ||
Singers | Anirudh Ravichander | ||
Year | 2019 |
ஓ முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த
அடுத்த முறை உறக்கத்தை எடுத்த
தெளிய வச்சு மயக்கத்தை கொடுத்த
பெண்ணே உன் மேல்
எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ
நீ சுத்த விட்ட லூப்பில் நானும் திரிஞ்சேன்
நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன்
உன் டின்டர் ப்ரொப்பைல் பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்
இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ
நீ என்ன கேக்காத
பொஸஸ்ஸிவ் ஆகாத
அழகிய ஆண்கள்
என்ன கொஞ்சி பேச
அங்க கொஞ்சம் நெஞ்சம் ப்ரோக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ
நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
உன் சந்தேகத்த நீ எரி
நான் ஆல்மோஸ்ட் சீதைதான்
ஓ கண்ணே கண்ணே பார்
நான்தான் உன் சௌக்கிதார்
உன் மனசுக்கு காவல்
உடம்புக்கு காதல்
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ