காதல் ரோஜாவே பாடல் வரிகள்

Movie Name  Roja
திரைப்பட பெயர் ரோஜா
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer S.P. Bala Subrahmaniyam and Sujatha
Year 1992

பெண் : ……………………………….

ஆண் : { காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே } (2)

ஆண் : கண்ணுக்குள் நீ தான்
கண்ணீாில் நீ தான் கண்மூடி
பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல் காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே

பெண்குழு : ல..ல ல…லலலா
ல..ல ல…லலலா..ல..ல ல…
லலலா..லல லல லல லலலா….

ஆண் : தென்றல் என்னை
தீண்டினால் சேலை தீண்டும்
ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில்
தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி
ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை
ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

ஆண் : வாயில்லாமல் போனால்
வாா்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்

ஆண் : காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே

ஆண் : கண்ணுக்குள் நீ தான்
கண்ணீாில் நீ தான் கண்மூடி
பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்

பெண் : ……………………………….

ஆண் : வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளா்த்த தோட்டமே
கூந்தலில்லை தீா்ந்து போ
பூமி பாா்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

ஆண் : பாவையில்லை பாவை
தேவையென்ன தேவை ஜீவன்
போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்

ஆண் : காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே

ஆண் : கண்ணுக்குள் நீ தான்
கண்ணீாில் நீ தான் கண்மூடி
பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்

பெண் : ……………………………….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Roja, Roja Songs Lyrics, Roja Lyrics, Roja Lyrics in Tamil, Roja Tamil Lyrics, ரோஜா, ரோஜா பாடல் வரிகள், ரோஜா வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *