இமைக்காறியே என்னை இழைத்தாயடி பாடல் வரிகள்

Movie Selfie
படம் செல்பி
Music G. V. Prakash Kumar
Lyricist Arivu
Singers         G. V. Prakash Kumar,
Manasvini Gopal
Year 2022

ஆண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்

ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
 
ஆண் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே
 
ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி
 
ஆண் : கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே
 
ஆண் : ஓ மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள்
பார்த்து கிடக்கவா
 
ஆண் : பிடிவாதம் குறையாமல் நொடி நேரம்
விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா
சேரும் கடல்… ஆகும் ஊடல்
 
பெண் : காற்றில் நீராகவே
மூச்சில் மோதிடவா
நேரம் பாராமலே
காதல் செய்திடவா
 
பெண் : ஏய் உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல் காலங்கள்
தின்று தீர்க்கவா
அதிகாரம் எனதாகி அதிகாலை
நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா
 
பெண் : என் மூச்சிலே..உன் கூச்சலே
 
பெண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
 
ஆண் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே
 
ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *