தாண்டியா ஆட்டமும் ஆட பாடல் வரிகள் 

Movie Name  Kadhalar Dhinam
திரைப்பட பெயர் காதலர் தினம்
Music A.R. Rahman
Lyricist Vaali
Singer Unni Menon, M.G. Sree Kumar and Kavitha Krishnamurthy
Year 1999

ஆண் : தாண்டியா
ஆட்டமுமாட தசராக்
கூட்டமும் கூட குஜராத்
குமரிகளாட காதலன்
காதலிய தேட அவள்
தென்படுவாளோ எந்தன்
கண் மறைவாக இன்று
காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

ஆண் : தாண்டியா
ஆட்டமுமாட தசராக்
கூட்டமும் கூட குஜராத்
குமரிகளாட காதலன்
காதலிய தேட

ஆண் : உன்னைக்கண்டு
எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன
சொல்ல நூறு வார்த்தை
அல்ல அல்ல ஒரு வார்த்தை
புரியாதா

பெண் : எந்த வார்த்தை
சொல்லவில்லையோ நீ
அந்த வார்த்தை எந்தன்
கண்களால் நான் நூறு
ஜாடையில் சொன்னேனே
தெரியாதா புரியாதா

ஆண் : ஓஓ… { மையைப்போல
நானும் கண்ணில் சேர வேண்டும் } (2)
பூவைப்போல நானும் உந்தன்
கூந்தல் சேர வேண்டும்

பெண் : ஓ… கண்ணில்
வைத்த மையும் கரைந்து
போகக்கூடும் கூந்தல் வைத்த
வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்

ஆண் : சிறு காதல் நெஞ்சை
நான் தரலாமா உன் கணவனாக
நான் வரலாமா

பெண் : இந்த வார்த்தை
மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : தாண்டியா
ஆட்டமுமாட தசராக்
கூட்டமும் கூட குஜராத்
குமரிகளாட காதலன்
காதலிய தேட அவள்
தென்படுவாளோ எந்தன்
கண் மறைவாக இன்று
காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

பெண் : காதல் பார்வைகள்
எல்லாமே அழகு காதல்
வார்த்தைகள் எல்லாமே
கவிதை காதல் செய்வதே
எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்

ஆண் : காதல் என்பதைக்
கண்டு பிடித்தவன் காலம்
முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும்
பூலோகம் பூலோகம்

பெண் : ஓஹோ… உள்ளம்
என்ற ஒன்றை உன்னிடத்தில்
தந்தேன் தந்த உள்ளம் பத்திரமா
தெரிந்துகொள்ள வந்தேன்

ஆண் : ஓஹோ… என்னைப்
பற்றி நீதான் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம்
என்னுடைய உயிரு

பெண் : இரு உயிர்கள்
என்பதே கிடையாது
இதில் உனது எனது
எனப் பிரிவேது

ஆண் : இந்த வார்த்தை
மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

ஆண் : { வாலிப நெஞ்சங்கள்
உறவு கொண்டாட வந்தது
இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி } (2)

ஆண் & பெண் : துணை செய்ய
நாங்கள் உண்டு தோழரே துணிந்து
நீ காதல் செய்வாய் தோழியே
{ உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே } (2)

பெண் : ஓஓஓஓஓஓ…..…

ஆண் & பெண் : { உங்களாலே
என்றும் மண்ணில் காதல் வாழுமே } (2)

பெண் : ஓஹோ ஹோ ஹோ ……
ஓஹோ ஹோ ஹோ ……

ஆண் & பெண் : { உங்களாலே
என்றும் மண்ணில் காதல் வாழுமே } (2)

பெண் : ஓஹோ ஹோ ஹோ ……
ஓஹோ ஹோ ஹோ ……

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Kadhalar Dhinam, Kadhalar Dhinam Songs Lyrics, Kadhalar Dhinam Lyrics, Kadhalar Dhinam Lyrics in Tamil, Kadhalar Dhinam Tamil Lyrics, காதலர் தினம், காதலர் தினம் பாடல் வரிகள், காதலர் தினம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *