உன் வெள்ளந்தியும் அழகு தான் பாடல் வரிகள்

Movie Irumban
படம் இரும்பன்
Music Srikanth Deva
Lyricist Savee
Singers         Srikanth Deva
Year 2022

பெண் : ………………………..

 
ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்
 
ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்
 
பெண் : உன் ஓர பார்வ பார்த்து
என் மனச நானும் தொலச்சேன்
உன் குறும்பு பேச்சு குள்ள
என் காதல் கண்டு பிடிச்சேன்
 
பெண் : ………………………..
 
பெண் : கனவா வந்த
நெசமா எனக்குள் நீயும் மொளச்ச
ஆண் : ஏய் நெசந்தான் இது நெசந்தான்
என் மனசில் உன்ன சொமப்பேன்
 
பெண் : உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும்
உன்னாலே புதுசொர்க்கம் நான் காண வேண்டும்
 
ஆண் : காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும்
ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும்
 
பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே
வானும் இம்மண்ணும் இனி நாமாகவே
 
ஆண் : அழகே என் அழகே நீ கடல் போலவே
அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே
 
இசை : …………………..
 
ஆண் : சுகமா இது வலியா
இந்த காதல் பெருந்தவிப்பா
பெண் : சுகந்தான் இது சுகந்தான்
உன் உயிரில் வந்து கலந்தேன்
 
ஆண் : கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன்
இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன்
 
பெண் : தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும்
நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும்
 
ஆண் : தீயே என் தீயே எனை நீராக்கவா
தீதும் நன்றும் இனி நீ ஆகவே
 
பெண் : சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு
பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே
 
ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்
 
பெண் : உன் ஓர பார்வ பார்த்து
என் மனச நானும் தொலச்சேன்
உன் குறும்பு பேச்சு குள்ள
என் காதல் கண்டு பிடிச்சேன்
 
பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே
ஆண் : அலையாய் வந்து தொடுவேன்
சிறு கரையாகவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *