தோகை இளமயில் ஆடி வருகுது பாடல் வரிகள் 

Movie Name  Payanangal Mudivathillai
திரைப்பட பெயர் பயணங்கள் முடிவதில்லை
Music Ilayaraja
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam
Year 1982

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ

ஆண் : கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

ஆண் : விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம்
நாம் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்

ஆண் : அருவிகளோ ராகந் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Payanangal Mudivathillai, Payanangal Mudivathillai Songs Lyrics, Payanangal Mudivathillai Lyrics, Payanangal Mudivathillai Lyrics in Tamil, Payanangal Mudivathillai Tamil Lyrics, பயணங்கள் முடிவதில்லை, பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள், பயணங்கள் முடிவதில்லை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *