செவக்காட்டு பாடல் வரிகள்

Movie Nenjuku Needhi
படம் நெஞ்சுக்கு நீதி
Music Dhibu Ninan Thomas
Lyricist Yugabharathi
Singers         Guru Ayya Durai
Year 2022
ஆண் : ஹா..ஆஅ…
அரிச்சந்திர மாமன்னர் ஆட்சியில் நடந்ததென்னவோ
சத்தியமே சோதனையாய் சரிந்து கீழே விழுந்ததென்னவோ
சகத்தோரே உணர்ந்திடுவீர்
சகலரும் வந்து சேரும் இடுகாட்டு மத்தியிலே இருக்கின்றதோ
ஐயோ எங்கே தேடுவேன்
 
ஆண் : ஏறாத மலை ஏறி இறங்காத கடல் இறங்கி
வடிக்காத கண்ணீர் விட்டு ஓடினேன் தேடினேன் ஓடினேன்
கண்ணே மணியே என்று உன்னை நாடுவேன்
 
ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
அரசாண்ட நாட்ட விட்டே
நகர்ந்தாரே செல்லா காசா
 
ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல
பொக பொகயா போனாரே
எல்லாத்தையும் எழந்த பொறவு
ஈம காட்ட சேந்தாரே
 
ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
 
ஆண் : பட்டாட குப்பையிலே
பல்லாக்குமே வீதியிலே
எட்டூரு சுத்தி வந்தோம்
பட்டினிக்கு சோறுயில்லே
 
குழு : …………..
 
ஆண் : கண் போக காட்சியில்லே
கால் போக ஊருமில்லே
மண்ணாகி போன பின்னே
மானிடருக்கு சாதியில்லே
 
ஆண் : பஞ்சாங்க நூலு தான்
பள்ளம் தோண்டுதே
அன்னாடங்காய்ச்சிய
குத்தி சாய்க்குதே
 
ஆண் : கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி
கொட்டுன்னு தானே சொன்னாங்க
கூரயுமில்லா வீட்டுல வாழும்
எங்களை எதுக்கு கொன்னாங்க
 
ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
 
ஆண் : மும்மாரி பெய்யுதுங்க
மூணு போகம் விளையுதுங்க
ஒப்பாரி வைக்கும் சனம்
ஒசர வழி தெரியலைங்க
 
ஆண் : முள்ளோடு பூவிருக்கு
முத்தத்துல நெலவிருக்கு
கல்லான கடவுளுக்கே
கருணை அது எங்கிருக்கு
 
ஆண் : கற்பூரம் ஏத்தியும்
கண்ண காட்டலே
நெய் சோற போட்டுமே
மண்ண காக்கல
 
ஆண் : பொய்யில உண்ம பொசுங்கி போக
எத்தன சட்டம் அம்மாடி
நீதிய காசுக்கு வாங்குற மனுசன்
நிக்கிறான் பாரு முன்னாடி
 
ஆண் : செவக்காட்டு
குழு : சீமையெல்லாம்
ஆண் : ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
குழு : அரிச்சந்திரா ராசா
ஆண் : அரசாண்ட நாட்ட விட்டே
குழு : நாட்ட விட்டே
ஆண் : நகர்ந்தாரே செல்லா காசா
 
ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல
பொக பொகயா போனாரே
எல்லாத்தையும் எழந்த பொறவு
ஈம காட்ட சேந்தாரே
 
ஆண் : அரிச்சந்திரா ராசா
 
குழு : ……………………….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *