அன்பாளனே சொல் பாடல் வரிகள் 

Movie Name  Lal Salaam
திரைப்பட பெயர் லால் சலாம்
Music A. R. Rahman
Lyricist Yugabharathi
Singer Deva and A. R. Rahman
Year  2024

பெண் : ………….

ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓ… ஓஓ…

ஆண் : வல்லோனே நான் உன்னை காண்பேனோ
துன்பத்திலே சொல் சொல் சொல்

ஆண் : அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்

ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…

ஆண் : நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…

ஆண் : பொய்வேடம் நான்
என்றும் இட்டேன் இல்லை
இல்லாரின் கைக்காசை
தொட்டேன் இல்லை

ஆண் : ஆனாலும் அல்லா நீ ஏன்
என்னை தீயாய் சுட்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…

ஆண் : சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன்
அன்பாலே தீரும் துயர் யாவும்
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே
கை சேர பாரம் பறந்தோடும்

ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாஹ் உன்னாலே ஆகும்

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…

முனகல் : …………..

ஆண் : முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் அன்பின்றி வெல்வார் உண்டோ
ஓஓஓ….

ஆண் : தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் கண் இன்றி காண்பார் உண்டோ
ஓஓஓ….

ஆண் : ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்
தூரல் கிடையாதே
பூலோகம் ஆனாலும் அல்லாஹ்
உன் சொல்லின்றி பூவும் மலராதே

அனைவரும் : எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்
இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே
ஓஓஓ…

அனைவரும் : நோய் ஏது நொடி ஏது
நீ இன்றி உயிர் ஏது சொல்
ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல்

ஆண் மற்றும் குழு : அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்

பெண் : …………………

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags:  Lal Salaam Lal Salaam Songs Lyrics Lal Salaam Lyrics,  Lal Salaam Lyrics in Tamil Lal Salaam Tamil Lyrics லால் சலாம்,  லால் சலாம் பாடல் வரிகள்,  லால் சலாம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *