போகும் வழிகளெங்கும் தாகம் பாடல் வரிகள்

Movie Kuthiraivaal
படம் குதிரைவால்
Music Pradeep Kumar and Maarten Visser
Lyricist Uma Devi
Singers         Anthony Daasan
Year 2022

ஆண் : லாலா லாலா லாலா….(4)

 
ஆண் : போகும் வழிகளெங்கும்
தாகம் தீர்க்கும் சோலை நான்
வாழும் மலைகள் எங்கும்
அருவி பாடும் கீதம் நான்
 
ஆண் : அடுத்ததை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே
அனுதினம் பசி களைப்பாறுவேன்
 
ஆண் : காணும் காட்சியில்
யாவும் மாறுதே
வாழ்வின் மாயம் என்ன
 
ஆண் : நோக்கம் நீங்கியே
ஏக்கம் இன்றியே
வாழும் விந்தை நானே
 
ஆண் : நேற்றின் எண்ணங்கள்
மாற்று வண்ணங்கள்
பேசும் மின்னல் நானே
 
ஆண் : நீரில் நில்லுங்கள்
வானில் செல்லுங்கள்
யாவும் உண்மை தானே
 
ஆண் : ஓடும் பட்சியின்
பாதை செல்லுங்கள்
போகும் சொர்க்கம் தானே
 
ஆண் : காற்றை நீக்கியே
பாட்டை பாடுங்கள்
கூச்சல் ராகம் தானே
 
ஆண் : ஹாஹாஹா …..
 
ஆண் : வெயில் சிரிப்பிலே
எனை திறக்கிறேன்
மழை துளியிலே
எனை துறக்கிறேன்
 
ஆண் : நேற்றின் நதி யாவுமே
நாளை மடை மாறலாம்
கனவின் நிஜம் யாவுமே
காற்றில் விடை தேடலாம்
 
ஆண் : நீளும் மலையாகிறேன்
வீழும் விதையாகிறேன்
வேர்கள் எனை தேடலாம்
வெறும் காற்றில் புயல் சேரலாம்
 
ஆண் : காடாய் பெருங்காடாய்
வாராய் நீ வாராய்
 
ஆண் : இருளினை பழகிடும் போது
மறைந்தவை முளைத்திடும் தோழா
கதவுகள் திறந்திடும் போது
கடல் ஒன்று அழைத்திடும் வா வா
 
ஆண் : அடுத்தை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே
அனுதினம் பசி களைப்பாறுவேன்
 
ஆண் : காணும் காட்சியில்
யாவும் மாறுதே
வாழ்வின் மாயம் என்ன
 
ஆண் : வாழும் சட்டங்கள்
வாழ்வின் வட்டங்கள்
யாவும் மீள்வதென்ன
 
ஆண் : நியாயம் இன்றியே
நியாயம் ஒன்றையே
நீங்கள் காண்பதென்ன
 
ஆண் : மாறும் ஒன்றிலே
நாமும் ஒன்றென
சேர்ந்தால் இன்பம் தானே
 
ஆண் : ஹாஹாஹா ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *