பறந்து போகின்றேன் பாடல் வரிகள்
| Movie | Kuthiraivaal | ||
|---|---|---|---|
| படம் | குதிரைவால் | ||
| Music | Pradeep Kumar and Maarten Visser | ||
| Lyricist | Prasath Ramar | ||
| Singers | Pradeep Kumar and Kalyani Nair | ||
| Year | 2022 | ||
ஆண் : ……………………….
ஆண் : பறந்து போகின்றேன்
சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்
ஆண் : கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ
ஆண் : வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே
ஆண் : …………………
பெண் : மடிசாய ஓடிவா
மாயவா
முடியாத வான்போல நான்
மாயவா
பெண் : நிலவானதால் புனலாகிறேன்
நீ வந்து காய தினம் தோன்றியே
நிதம் தேய்கிறாய்
என் மேனி வாட
பெண் : காற்றோடு தீ ஆட
ஓர் வேள்வி செய்தேனே
இருவர் : உன் பிம்பம் நான் சேர
உருவின்றி நின்றேனே
ஆண் : பறந்து போகின்றேன்
சிறகில்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்
ஆண் : கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ
ஆண் : வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே
