மாயங்கள் மன்மதம் பாடல் வரிகள்

Movie Kutty Story
படம் குட்டி ஸ்டோரி
Music Premji Amaren
Lyrics Madhan Karky
Singers         K Krishna Kumar
Year 2021

பெண் : அங்கிங்க நாலுபடி அணைத்திழுக்க போறேன்

நானா இல்லாதபடி என்னை இழக்க போறேன்
எங்கும் செல்லாதபடி வசித்திருக்க போறேன்
உனையே கேக்குறேன் கேக்குறேன்
காதல தேக்குறேன்
காயமும் ஏக்குறேன்
உனையே கேக்குறேன் கேக்குறேன்
காரணம் சேர்க்குறேன்
கை தொட பார்க்குறேன்
கரையில கரையுறேன்

வசனம் : …………………….

இருவர் : மாயங்கள் மன்மதம்
வாதங்கள் வஞ்சகம்
பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்
நின்றால் என்னாகும்

இருவர் : ரீங்காரம் சில்மிஷம்
காயங்கள் கண்டனம்
பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்
நின்றால் என்னாகும்

பெண் : யாரோட யார் சிக்கி
போராட போறோமோ இங்க
யாரோட போதைக்கு
தள்ளாடி தீர்போமோ இங்க
ஹே பல் இல்லா மீன் ஒன்னு
பாய்ந்தோடும் காட்டாற திங்க
உனையே கேக்குறேன் கேக்குறேன்
காரணம் சேர்க்குறேன்
கை தொட பார்க்குறேன்
கரையில கரையுறேன்

இருவர் : பூகம்பம் பூ மழை
தேன் கிண்ணம் தேய்பிறை
பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்
நின்றால் என்னாகும்

இருவர் : தேவைகள் தண்டனை
காமங்கள் நித்திரை
பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்
நின்றால் என்னாகும்

ஆண் : மாயங்கள் மன்மதம்
வாதங்கள் வஞ்சகம்
பெண் : உன் அருகில் உன் அருகில் உன் அருகில் நானும்
ஆஆஆ…..ஆஆஆ…..
ஆண் : மாயங்கள் மன்மதம்
வாதங்கள் வஞ்சகம்
நின்றால் நின்றால் நின்றால் என்னாகும்

ஆண் : சத்தியமா இனிமே உனக்கு துரோகம் பண்ணமாட்டேன்
என்ன மன்னிச்சிரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *