கண்டா வரச்சொல்லுங்க பாடல் வரிகள்

Movie Karnan
படம் கர்ணன்
Music Santhosh Narayanan
Lyrics Mari Selvaraj
Singers         Santhosh Narayanan
Year 2021

சூரியன பெக்கவில்லை
சந்திரனும் சாட்சி இல்லை

சூரியன பெக்கவில்லை
சந்திரனும் சாட்சி இல்லை
பாதகத்தி பெத்த பிள்ளை
பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை

கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கெளை

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கெளை
ஒத்தக்கிளி நின்னாக்கூட
கத்தும்பாரு அவன் பேர

கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா

ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடம்ங்கூட இல்லயப்பா
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா

கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூடயில்லை
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை

வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை

கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *