இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ பாடல் வரிகள் 

Movie Name  Thambathyam Oru Sangeetham
திரைப்பட பெயர் தாம்பத்தியம் ஒரு சங்கீதம்
Music M. S. Viswanathan
Lyricist Vaali
Singer S. P. Balasubrahmanyam
Year 1982

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை
இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை
தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : அந்த காமன் விடும் மலர்கணைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
அந்த காமன் விடும் மலர்கணைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
இந்த தோகை மயில் உறவுகளை நாடி
கொஞ்ச துடித்திருக்கும் காதலனை நாடி

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

ஆண் : எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இவள் சிந்தி சிந்தி பறித்துக் கொண்டப் பூவை
கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும்
இந்த மெல்லிதழாள் புருவம் கண்டால் நாணும்

ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Thambathyam Oru Sangeetham, Thambathyam Oru Sangeetham Songs Lyrics, Thambathyam Oru Sangeetham Lyrics, Thambathyam Oru Sangeetham Lyrics in Tamil, Thambathyam Oru Sangeetham Tamil Lyrics, தாம்பத்தியம் ஒரு சங்கீதம், தாம்பத்தியம் ஒரு சங்கீதம் பாடல் வரிகள், தாம்பத்தியம் ஒரு சங்கீதம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *