என்ன பெத்த தேவதையே பாடல் வரிகள்

Movie Theal
படம் தேள்
Music C. Sathya
Lyricist Umadevi
Singers         C. Sathya
Year 2022

ஆண் : என்ன பெத்த தேவதையே

 
என்னுடையே தேவதையே
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா
அன்புகொண்ட பார்வையிலே
இன்பம் கொண்டு வந்தவளே
மூச்சுக்கான காத்தும் நீ தானா
 
ஆண் : தனி மரமா உலகில் நின்னேனே
அட மழையா உனையே கண்டேனே
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே
 
ஆண் : சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே
 
ஆண் : நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல
நெனப்புக்கு யாருமில்ல
உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல
 
ஆண் : புத்தி தந்த பூ மரமே
என்ன தொட்ட ஓங்கரமே
மனச மனச மந்திரமா மாத்துதிங்கே
 
ஆண் : ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால
ஏங்கதி நீ தான் வாழ்வேனே இனி உன்னால
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே
 
ஆண் : சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே
 
ஆண் : கோயில் குளம் சுத்துனாலும்
சொல்லாமலே கூட வரும்
மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே
 
ஆண் : பார்வையில புரிய வைக்கும்
வார்த்தையில வலிய நீக்கும்
மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும்
 
ஆண் : சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால
கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே
 
ஆண் : சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே
 
ஆண் : என்ன பெத்த தேவதையே
என்னுடையே தேவதையே
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *