எனது உயிரை பார்கிறேன் பாடல் வரிகள்

Movie Thozhar Venkatesan
படம் தோழர் வெங்கடேசன்
Music Sagishna Xavier
Lyrics Mahashivan
Singers         Niranjana Ramanan
Year 2019

எனது உயிரை பார்கிறேன்
நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன்
உன் காலடி தடங்கல்தான்
என் வாழ்க்கை ஆகின்றதோ

உனது நிழலாய் தொடருவேன்
உன் இதயம் முழுவதும் படருவேன்
உன் உடம்பிலே உதிரமாகி
உயிரில் கலப்பேனோ

உன் மூச்சு காற்றினையே
நாள் தோறும் சுவாசிப்பேன்

என் இதய ஓசையினை
உன் மார்பில் கேட்கின்றேன்

நிழலுக்கு புது வண்ணங்கள்
நீ தீட்டி செல்கின்றாய்

விழிகள் எனது பார்வை உனக்கு
வானவில்லால் நிரப்புவேன்

செவிகள் உனது ஓசை எனது
தமிழில் மந்திரம் ஊதுவேன்

மத்த காதலை மேகமாக்கி
உன் மனதில் மழையாய் பொழிவேனே

அதில் பூத்த பூக்களை
தொடுத்து உனக்கு படுக்கையாக பகிர்வேனே

ஓ…..வேண்டும் வேண்டும்
உனது நெருக்கம்
அதுவே எனது ஜென்ம மோட்சம்

உனது உயிரை எனது வயிற்றில்
சுமக்க வரம் வேண்டும்

நடக்க பாதை கேட்டாலே நீ
ரெக்கை முளைக்க செய்கிறாய்

பறக்க சிறகை விரித்தால்
நான் வானின் எல்லையை நீட்டுவேன்

ஜென்ம ஜென்ம பந்தமே
வரும் ஜென்மங்களும் தொடருமா

வாழ பூமி போதுமா
இல்லை வேறு கிரகம் வேண்டுமா

போதும் போதும் உனது இதயம்
அதுவே எனது ஈர் ஏழு உலகம்

எனது மரணம் உனது மடியில்
நிகழ வரம் வேண்டும்

உனது நிழலாய் தொடருவேன்
உன் இதயம் முழுவதும் படருவேன்
உன் உடம்பிலே உதிரமாகி
உயிரில் கலப்பேனோ

எனது உயிரை பார்கிறேன்
நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன்
உன் காலடி தடங்கல்தான்
என் வாழ்க்கை ஆகின்றதோ

உன் மூச்சு காற்றினையே
நாள் தோறும் சுவாசிப்பேன்

என் இதய ஓசையினை
உன் மார்பில் கேட்கின்றேன்

அகத்திலும் என் புறத்திலும்
நீ யாதுமாகின்றாய்……ஆஅ…..ஆ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *