பூக்கும் மலரை கைகள் குலுக்கி பாடல் வரிகள்
| Movie Name | Udhaya | 
|---|---|
| திரைப்பட பெயர் | உதயா | 
| Music | A. R. Rahman | 
| Lyricist | Pazhani Bharathi | 
| Singer | Hariharan | 
| Year | 2004 | 
விசில் : …………………
ஆண் : பூக்கும் மலரை
கைகள் குலுக்கி
தென்றல் சொல்லும்
காலை வணக்கம்
ஓஹோ ஹோ ஹோ
அலார சேவல் அதிகாலை
மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள்
ஆண் : {அன்னை வயல்கள்
பிள்ளை மனங்கள்
உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்} (2)
ஆண் : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு
குழு : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு
குழு : லாலா ல ல…லாலா லா
ஹே
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லா
ஆண் : பச்சை தாளில்
வெள்ளை எழுத்து
கள்ளி செடியில் காதல் கவிதை
கிச்சு கிச்சு யார்
மூட்டிவிட்டது
வெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள்
ஆண் : ஓஹோ ஹோ ஹோ
தொட்டு பூக்கும்
புல் வெளிகள்
இவை அல்லவா சுக வரங்கள்
ஆண் : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
குழு : கோடி செல்வம் எதற்கு
ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
குழு : உறவு போதும் எனக்கு
ஆண் : கனவே …. கனவே….
ஆண் : {பின்னல் செடி விழுது
ஊஞ்சல் ஆட கொடுக்கும்
ஆலமரம் கூட தோழி எனக்கு} (2)
ஆண் : சேர் படிந்த வேட்டி
மெல்லிய செருப்பு
மாலை சந்தை கூச்சல் இசை எனக்கு
ஆண் : கைகளை நீட்டி
நிலவை தொடும்
யோகம் வேண்டும் எனக்கு
யோகம் வேண்டும் எனக்கு…
யோகம் வேண்டும் எனக்கு…
யோகம் வேண்டும் எனக்கு…
ஆண் : {சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
குழு : கோடி செல்வம் எதற்கு
ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
குழு : உறவு போதும் எனக்கு} (2)
ஆண் : கோடி செல்வம் எதற்கு….
| Tags: Udhaya, Udhaya Songs Lyrics, Udhaya Lyrics, Udhaya Lyrics in Tamil, Udhaya Tamil Lyrics, உதயா, உதயா பாடல் வரிகள், உதயா வரிகள் | 
|---|
 
                    