யார் அந்த ஓவியத்தை பாடல் வரிகள்

Movie Kalathil Santhippom
படம் களத்தில் சந்திப்போம்
Music Yuvan Shankar Raja
Lyrics Pa. Vijay
Singers         Vijay Yesudas
Year 2021

யார் அந்த ஓவியத்தை
நடமாட வைத்ததோ
உன் வீட்டில் மாட்டி வைக்க
கால நேரம் வந்ததோ

கண்ணாடி மாளிகையே
கண் வைத்து பார்த்ததோ
முன்னே அவள் நின்ற போது
கண்கள் கூசி போனதோ

உலக அழகி இல்லை
உலவும் நிலவும் இல்லை
பழக தோழியா தெரியிறா

அதிர சிரிப்பும் இல்லை
அதிக சிவப்பும் இல்லை
அழகின் ஓவியமா அசத்துறா

கவிதை போல வந்து
கனவு போல வந்து
உனக்கு அப்படியே பொருந்துறா
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா

அவதான் உன் மாமன் பொண்ணு
அயில மீன் கண்ணே கண்ணு
உனக்கான ஜோடியின்னு
நான் பார்த்து அசந்த பொண்ணு

என்னன்னு நான் சொல்ல
அழகுன அத்தனை அழகு
அன்றாடம் நீ மெல்ல
ஐ லவ் யூ சொல்லி பழகு

நான் பார்த்த தேவதைக்கு
சிறகில்லை உண்மையில்
அவள் போல பெண்ணை நானும்
பார்த்ததில்லை அண்மையில்

தரை மேலே நின்ற போதும்
மிதக்கின்றாள் மென்மையில்
தங்கத்தை ஊற்றி ஊற்றி
வார்த்து வைத்த பொன்மயில்

லட்சம் பூ பறிச்சு
மிச்சம் தேன் தெளிச்சு
வச்ச அழகு அவ அழகடா

அச்ச பார்வையில
உச்சம் கவிதை ஒன்னு
அச்சில் எட்டி விடும் அடடடா

கச்ச தீவுக்கொரு
மச்சம் வச்சது போல்
பச்சை பசுமை அவ பாரடா
அழகடா அவளடா அசந்து போலாம்டா

அவள் கண்கள் கவிதை பக்கம்
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்
அவள் வந்து முன்னே நின்றால்
நிலவெல்லாம் பின்னே நிற்கும்

மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல

கண்ணாடி சிலையை போல
முன்னாடி சிரிச்சு போறா
ஆத்தாடி உன் மனச
அங்காடி ஆக்க போறா

மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *