வேறு வேலை உனக்கு பாடல் வரிகள்

Movie Mappillai
படம் மாப்பிள்ளை
Music Ilaiyaraaja
Lyrics Piraisoodan
Singers         S. P. Balasubrahmanyam,
S. Janaki
Year 1989
    பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
குழு : லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
காதல் போல வேலை இல்லையே
என்னைக் கொஞ்சி ஆதரி
என் ராஜா ராஜாதி ராஜா ஓ…
புது ரோஜா வாடாத ரோஜா ஓ…
ஆண் : வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே

குழு : ……………………………

பெண் : தானாக பூத்த முல்லையே
வாசம் இன்றிப் போகுமோ
பூ மீது வீசும் தென்றலே
மாறிப் போதல் நியாயமோ
ஆண் : நீயாகப் பேசவில்லையே
காசுதானே பேசுது
பெண் : அஹான்
ஆண் : நானாகப் பாடவில்லையே
அனுபவம்தான் பாடுது
பெண் : வயசு இள வயசு
எனக்கிருக்கு மனக்கிறுக்கு
ஆண் : ஒட்டாதடி என்னைச் சுத்தாதேடி
இது எட்டாது கிட்டாது பித்தான மானே
ஆண் : வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
என் வாணி ஆகாது போணி ஹோய்
அன்பே நீ ஆகாசவாணி ஆ….ஆஅ….ஆஅ…..
பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஆண் : ஆஅஹ்ஹ

குழு : ………………………….

விசில் : ……………………………….

ஆண் : அருகதை இல்லாத என்னை

ஆதவனே என்கிறாய்
இவன் ஒரு பொல்லாத பிள்ளை
மாதவன் நான் என்கிறாய் ஓ……ஓ…ஓ
ஆண் : அருகதை இல்லாதவன்தான்
ஊரில் உந்தன் பேச்சுத்தான்
கதைகள் விடும் மாதவன்தான்
கன்னி எந்தன் மூச்சுத்தான்
ஆண் : கிறுக்கு பணக் கிறுக்கு
அது இருக்கு உனக்கிருக்கு
பெண் : ஏகாந்தனே
நீ என் காந்தனே
அந்த மின்காந்தம் என் மீது
ஒன்றாக வேண்டும்
பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஆண் : ஓ ஹோய் போதும் போதும்
உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
பெண் : என் ராஜா ராஜாதி ராஜா ஓ…
ஆண் : என் வாணி ஆகாது போணி ஹோய் ஹோய்
பெண் : ஹோய் வேறு வேலை
உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
நில்லு கொஞ்சம் தள்ளியே

பெண் : ஆஹ்ன்

ஆண் : ஆஹ் ஆஹ்ன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *