வெள்ளை ராசத்தியே பாடல் வரிகள்
Movie | Kanne Kalaimaane | ||
---|---|---|---|
படம் | கண்ணே கலைமானே | ||
Music | Yuvan Shankar Raja | ||
Lyrics | Vairamuthu | ||
Singers | Yuvan Shankar Raja | ||
Year | 2019 |
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்
நிலை பாடு மாறாதடி
வானத்தின் உயரம்
கூடுமா குறையுமா
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்
அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால்
அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே
வேதம் சொல்ல ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்
நிலை பாடு மாறாதடி
வானத்தின் உயரம்
கூடுமா குறையுமா