உதிரா உதிரா பாடல் வரிகள்

Movie Pon Manickavel
படம் பொன்மாணிக்க வேல்
Music D. Imman
Lyrics Madhan Karky
Singers         Shreya Ghoshal
Year 2019

உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்

உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்

எனை உரசிடும் மீசை கொண்டு
எறும்பியல் படித்தேன்
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு
மதுவியல் படித்தேன்
நா ரெண்டும் பின்னிக் கொள்ள
வேதியல் படித்தேன்

உதிரா உதிரா
வினவல் ஏனோ கண்ணில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்

கன்னகரு கரு கூந்தல் போதும்
வனவியல் விளக்க
சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும்
வானியல் விளக்க
உன் நெஞ்சின் ஆழம் போதும்
கடலியல் நீ படிக்க

ஒரு பரிசைக்கென
இவள் தவம் கிடக்க
என்னை தொட்டு நீயும் கலைக்க


அங்கே பானிபட்டு போர்
இங்கு மேனிபட்டு போர்
முத்தம் இட்டு இட்டு
இட்டு எனை நீயும் கவிழ்க்க

தேவைகள் ஆயிரம்
தேர்வுகென்ன தீவிரம்
நடந்து முடிந்த போர்கள் எல்லாம்
நமக்கு ஏனடி
விடிய விடிய போர்கள் செய்தே
சரிதம் எழுதடி

நிதிநிலை நான் கேட்க
என் ஆடை நீ நீக்க
பண மதிப்பின் ஏற்றம்
இறக்கங்கள் நீ காட்ட

அரசியலை அறிந்திடவே
உரசியல் அறிந்திடு மானே

ஒரு இரவில் மதிப்பிழந்தே
நாம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே

உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்

உனை உன்னை உன்னை தூரம் தள்ளி
உளவியல் படிப்பேன்
ஹ்ம்ம் இடை இடைவெளி நீக்கதானே
களவியல் படித்தேன்
காலத்தின் காலை கட்டி
களவியல் முடித்திடுவேன்

உதிரா உதிரா
ஹ்ம் ம்ஹ்ம் ஆஅ 
ஹாஆஅ உதிரா உதிரா
ஹ்ம் ம்ஹ்ம் ஆஅ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *